Thursday, May 21, 2009

ஜனநாயகப் புணர்ச்சி

வாருங்கள் தமிழர்களே..
கூடி அழுவோம்.
இது நம் வீட்டுச் சாவு..
நாம் நிகழ்த்திய கொலை..


ஒவ்வொரு முற்றத்திலும்
ஒரு பிணம் அழுகிக் கிடக்கிறது.
வேறென்ன செய்வது..?
கூடி அழுவோம்..


இதோ சாவின் சங்கீதமான
சங்கொலியும் வேட்டுச் சத்தமும் கேட்கிறது..
அது ஜனநாயக மரணத்தின்
இறுதி ஊர்வல சத்தம்.
வாருங்கள் கூடி அழுவோம்..
வேறென்ன செய்வது.?

ஜனநாயகத்தைப் புணர்ந்து
தேர்தல் வெற்றியை அடைந்த அரசியல்வாதிகளுக்கு
வாக்களித்த பாவம் தீர்ப்போம்..
வாருங்கள் தமிழர்களே..

ஒரு செய்தி

விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகளை விட
எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம்.

1 comment:

  1. குருதி கொட்டும் / குடிக்கும் வார்த்தைகள்

    ReplyDelete