
எண்களில் தொலைந்தது
இன முழக்கம் !
ஏழுக்கும் ஐந்துக்கும்
மூன்றுக்கும் ரெண்டுக்கும்
விலைபோயின அக்னி மரணங்கள்.!
உரத்து முழங்கியவன்
சிறையிடப்பட்டான் !
அடக்கி வாசித்தவன்
அணியில் சேர்க்கப்பட்டான்
மேடைப்புலிகளின் வீரவாள்
உறையிடப்பட்டது !
இனி
மடிந்து வீழுங்கள்
தேர்தல் முடிந்து பார்ப்போம்.!
இன உணர்விற்கு குறுக்கே
எலெக்ஷன் வந்தால்
என்ன செய்வது.!
வாருங்கள் முட்டாள்களே !
ஜனநாயக கடமையாற்றுவோம்
இறையாண்மை காப்போம்.
போங்கடாங் ...!
//உரத்து முழங்கியவன்
ReplyDeleteசிறையிடப்பட்டான் !
அடக்கி வாசித்தவன்
அணியில் சேர்க்கப்பட்டான்
மேடைப்புலிகளின் வீரவாள்
உறையிடப்பட்டது ! //
ஈழப்பிரச்சினையில் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் எந்த ஒரு பலன் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.இவர்கள் தமிழ்நாட்டைப்பிடித்த சனி .
விகடனில் இதனைப் படித்துவிட்டு அழுத கணங்கள் என் நெஞ்சில் இருக்கின்றன இன்றும் . முத்துக் குமார் ஒவ்வொரு தமிழ் இதயத்திலும் குடியிருப்பவன்
ReplyDelete